வடகிழக்குப் பருவமழையின் போது, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தன்னார்வலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சர்வதேச அளவில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து மண்டல அளவில் "பிங்க் பல்ஸ் 2026" (PINK PULSE 2026) என்ற தலைப்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்கான கருத்தரங்கம் இணையவழியில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தேர்தல் கல்வி மன்றத்தினை (Electoral Literacy Club) செயல்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், அத்திப்பட்டு திடக்கழிவு வளாகத்தில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாய்கள் கருத்தடை மையம் மற்றும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இழப்பீடு தொகையாக தலா ரூ.30 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி.சிவா அவர்கள் இன்று வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒருமுறைப் பயன்பாட்டு நெகிழிப் பொருட்களின் தடை அமலாக்கத்தை கண்காணிப்பதற்கான பெருநகர சென்னை பகுதி சிறப்புப் பணிக்குழுவின் 3ஆவது ஆய்வுக் கூட்டம் பணிக்குழுவின் தலைவர்/மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்களை தங்கவைப்பதற்கான 27 நிவாரண முகாம்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள் தகவல்
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்றும் (10.10.2026) மற்றும் இன்றும் (11.10.2026) நடைபெற்றது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று (10.10.2026) 43 இடங்களிலிருந்து 23.9 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
சேப்பாக்கம் மற்றும் பீட்டர்ஸ் சாலைப் பகுதிகளில் தெருவோரம் வசித்த 17 குடும்பங்கள் மீட்கப்பட்டு மெரினாவில் உள்ள குடும்பக் காப்பகத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அரசு செயலாளர் திரு.சடேந்திர சிங், இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலை, கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையம், மூன்று சக்கர மின்கல வாகனங்களின் பராமரிப்பு பணிமனை மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையின் திடக்கழிவு மேலாண்மைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடுகளை மேம்படுத்தவும், ரூ.65 கோடி மதிப்பீட்டில் 356 புதிய வாகனங்கள், 2,873 குப்பைத் தொட்டிகள் மற்றும் உபகரணங்களின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற அலர்ட் கோல்டன் ஆர்மி' (ALERT Golden ARMY) வழங்கிய 'ஐடரெல்லா 26' (Aiderella 26) “முகமூடிக்கு அப்பால் - மாறுவேடத்தில் நாயகர்கள்” முதலுதவிக்கான பிரம்மாண்டமான திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றினார்.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை (10.10.2026)) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை ( 11.10.2026)) ஆகிய இரண்டு நாட்களில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திரு.வி.க. நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை இணை ஆணையாளர் (பணிகள்) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சென்னை வருகையினை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, போரூர் மெட்ரோ பகுதி மற்றும் ஐஐடி மெட்ராஸ் வளாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நாளை சனிக்கிழமை (10.10.2026) மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ( 11.10.2026) ஆகிய இரண்டு நாட்களில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/ பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்