பெருநகர சென்னை மாநகராட்சியின் ₹205.59 கோடி மதிப்புள்ள பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் (Green Municipal Bond) வாயிலாக தேசிய பங்குச் சந்தை (NSE)யில் நிதி திரட்டியுள்ளது
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்தில் (மண்டலம் 6ல்) தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் 29 பேர், தற்போது, திரு.வி.க.நகர் மண்டலத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனமான ராம்கி நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக இணைந்து அவர்களுக்கான பணி ஆணை இந்நிறுவனத்தின் சார்பில் இன்று (07.01.2026) வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிக்காட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ரூ.3.98 கோடி மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
சென்னை பள்ளிகளுக்கிடையிலான 2025-26ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில், மாண்புமிகு மேயர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
திருக்குறள் வாரத்தினை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் 11.01.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் அருகில் வசிக்கும் 58 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் அருகில் வசிக்கும் 58 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் இன்று (05.01.2026) தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் இன்று (04.01.2026) நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிக்காட்டுதலின்படி, கொளத்தூர், துறைமுகம், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் தலைவருமான அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 1,678 நபர்களிடமிருந்து 623.42 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்று (03.01.2026) ஒரு நாள் மட்டும் 91 இடங்களிலிருந்து 41.26 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.
தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாக, ஆன்லைனில் பதிவு செய்து பொது மக்கள் பார்வையிடலாம்.