பெருநகர சென்னை மாநகராட்சி, வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்ததாரரை நியமனம் செய்யும் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின்படி தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (TEXCO) நிறுவனத்தின் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டு 22.07.2024 முதல் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.