சென்னை மாநகராட்சி

வணக்கத்திற்குரிய மேயர்

பத்திரிக்கை செய்தி

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் (29.04.10) இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மொத்தம் 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

           முக்கிய தீர்மானங்கள்:

 
  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் இட்லி மாவு, தோசை மாவு, புரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், பதப்படுத்தப்பட்ட இறைச்சி-மீன்போன்ற உணவு பொருட்கள், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரொட்டி, கேக், பிஸ்கட், சமோசா, பப்ஸ், மோர் போன்ற உணவு வகைகளின் பாக்கெட்டுகளில், தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உணவு மூலக்கூறுகள், பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயன கலவைகள், நிற கலவைகள், தயாரிப்பாளர் முகவரி, தயாரிக்கப்பட்ட நாள், உபயோகிக்க கடைசி நாள் ஆகிய விவரங்கள் பாக்கெட்டுகள் மீது கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.  குறிப்பாக தமிழில் பெரிய எழுத்துக்களில் பொது மக்கள் எளிதாக படிக்கும் வண்ணம் குறிப்பிடப்பட வேண்டும்.  இவ்விவரங்கள் இல்லாத உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • சென்னை மாநகரில் பாலிதீன் பாக்கெட்டுகளில் விற்கப்படும் தண்ணீரின் தரம் பரிசோதிக்கப்பட்டபோது அதில் ஊடிடடகைடிசஅ க்ஷயஉவநசயை என்ற மல கழிவுகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் இப்பைகளில் தண்ணீர் நிரப்பும் பணியின்போது சூடி«-வடிரஉ£ தொழில் நுட்பம் பின்பற்றப்படாததினால் 22 நிறுவனங்கள் மூடப்பட்டன.  சென்னை மாநகராட்சியின் தொற்று நோய் மருத்துவமனையில் கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் பாலிதீன் பை குடிநீர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.  சென்னை மாநகரில் மக்கள் கூடும் பொது இடங்களிலும், குடிசைவாழ் பகுதிகளிலும் தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு, வயிற்றுபோக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, போன்ற நோய்களால் பெருவாரியாக மக்கள் பாதிக்கப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்குடன் பாலிதீன் பாக்கெட்டுகளில் குடிநீர் மற்றும் மோர் விற்கப்படுவது முற்றிலுமாக தடை செய்ய தமிழக அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்படும்.  சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம், நீலகிரி மாவட்டங்களில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.  அதுபோல சென்னை மாநகராட்சியிலும் பொதுமக்கள் நலன் கருதி மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியாத, ஒரு மு¬செய்ய தமிழக அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கப்படும்.  சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம், நீலகிரி மாவட்டங்களில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.  அதுபோல சென்னை மாநகராட்சியிலும் பொதுமக்கள் நலன் கருதி மறு சுழற்சிக்கு உட்படுத்த முடியாத, ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும், அதிகபட்சமாக 20 மைக்ரான் (20 ¬உசடி«) கீழுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக தேனீர் கப்புகள், கடைகளில் உபயோகப்படுத்தப்படும் பைகள் (ஊயசசல க்ஷயபள)  மற்றும் பாக்கெட்டுகள் ஆகியவற்றால் பொது மக்களுக்கு சுகாதாரகேடு மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல், மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் கழிவு நீர் குழய்களில் அடைப்பு ஏற்படுத்துல் போன்ற விளைவுகள் ஏற்படுவதால் அவை முற்றிலுமாக தடைசெய்யப்படும். 

         

  • மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்தப்படி, பெரம்பூர் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு. முரசொலி மாறன் அவர்களின் பெயர் சூட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும்.   ரூபாய் 1 கோடியே 33 இலட்சங்கள் செலவில் மண்டலம்-10, வார்டு-151ல் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே சர்தார் பட்டேல் சாலை மற்றும் மத்திய கைலாஷ் அருகில் உள்ள பாலத்தினை அகலப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 2 கோடியே 12 இலட்சங்கள் செலவில் மண்டலம்-5, வார்டு-67ல் ஓட்டேரி நல்லா குறுக்கே Ôஎன்பிளாக் மற்றும் Ôபிளாக் இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும். ரூபாய் 3 கோடியே 45 இலட்சங்கள் செலவில் கேப்டன் காட்டன் கால்வாய் குறுக்கே கிருஷ்ணமூர்த்தி நகர் மற்றும் எம்.கே.பி. நகரை இணைத்து பாலம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும். திருவல்லிக்கேணியில் சிலம்புச் செல்வர் .பொ. சிவஞானம் அவர்களுக்கு திருவுருவச் சிலை நிறுவ அனுமதி வழங்கப்படும். 

  • சென்னை மாநகரில் காசிமேடு, வியாசர்பாடி, ஓட்டேரி, வேலங்காடு, கிருஷ்ணாம்பேட்டை, கண்ணம்மாபேட்டை  மேற்கு ஜோன்ஸ் சாலை, மூலகொத்தளம் ஆகிய 8 மயான பூமிகள் நவீனமாக்கப்பட உள்ளது.  மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆலோசனைகளின்படி மண்டலம்-1 மற்றும் 10லுள்ள 11 நியாய நிலைக்கடைகளுக்கு சென்னை மாநகராட்சி இடங்களை ஒதுக்க அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 2 கோடியே 86 இலட்சங்கள் செலவில் மண்டலம்-3, வார்டு-49ல்  பிராட்வே பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழைநீர்வடி கால்வாய் அமைக்க மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கப்படும். ரூபாய் 7 கோடியே 40 இலட்சங்கள் செலவில் கொருக்குப்பேட்டை, இரயில்வே சந்திக் கடவின் குறுக்கே வாகன சுரங்கபாதை அமைக்கும் பணிக்கான திருத்திய மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கப்படும்.  வணிகர் சங்கங்களின் கோரிக்கையினையடுத்து சில இனங்களுக்கு உரிமம் கட்டடணத்தை குறைக்க அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 96 இலட்சங்கள் செலவில் மண்டலம்-10, வார்டு-142ல் பலவகை நோய் சிகிச்சை மருத்துவமனை கட்டும்பணிக்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும். ரூபாய் 100 கோடியே 60 இலட்சங்கள் செலவில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மாம்பலம் மற்றும் நந்தனம் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழைநீர்வடி கால்வாய் அமைக்க ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

  • ரூபாய் 38 கோடியே 15 இலட்சங்கள் செலவில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழைநீர்வடி கால்வாய் அமைக்க ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 34 கோடியே 43 இலட்சங்க கால்வாய் அமைக்க ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும். 

  • ரூபாய் 38 கோடியே 15 இலட்சங்கள் தலைசெலவில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழைநீர்வடி கால்வாய் அமைக்க ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 34 கோடியே 43 இலட்சங்கள் செலவில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழைநீர்வடி கால்வாய் அமைக்க ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்படும்.  ரூபாய் 12 கோடியே 6 இலட்சங்கள் செலவில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் மின் ஆளுமை திட்டம்  மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.   

  • சென்னையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பொதுமக்களிடமிருந்து 420க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு அதில் இதுவரை 85 நபர்கள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் முடி திருத்தியும், உடல் சுத்தம் செய்தும், தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.   மே திங்கள் 3ம் தேதி மனநல ஆற்றுப்படுத்துநர்கள், மனநல மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, அன்றைய தினமே சட்டரீதியாக காவல்துறை மற்றும் நீதித்துறை சான்று பெற்று சென்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.   1996ம் ஆண்டு தமிழக முதலமைச்சரமாக வர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பெறப்பட்டது.  தற்போது மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு என்பதனை திருத்தம் செய்து 50 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று மாற்றுவது குறித்து மன்றத்தின் கருத்து அரசிற்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்தார்.