Latest News

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி, மண்டலம் -8, கோட்டம்-103, எண்.14, ஆம்ஸ் ரோடு, 1வது குறுக்கு தெரு, கீழ்ப்பாக்கம்,சென்னை-10ல் அமைந்துள்ள ரிலையன்ஸ் பிரெஷ் சூப்பர் மார்கெட்டில் காலாவதியான பொருட்கள் மற்றும் அழுகிய பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கண்ட சூப்பர் மார்கெட்டில் மண்டல நல அலுவலர்- 8 துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.

Click Here to veiw article.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று (18.08.2014) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் (IRT) மூலம் அளிக்கும் புத்தாக்க பயிற்சியினை, இப்பயிற்சிக்காக வழங்கப்படும் தொகையின் 75 சதவீத தொகைக்கான காசோலையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

Click Here to veiw article.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.08.2014) சென்னை மாநகராட்சி மண்டலம் -7 வார்டு-90க்குட்பட்ட 4-வது அவென்யூவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் 90, 91 மற்றும் 93ஆகிய வார்டுகளுக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் ரூ. 230.17 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பபட்டுள்ள 872 எல்.இ.டி. தெரு மின்விளக்குகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கிவைத்தார்.

Click Here to veiw article.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (15.08.2014) சுதந்திர தினவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Click Here to veiw article.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (15.08.2014) வணக்கத்திற்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் சுதந்திர தினவிழாவையொட்டி தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மழைநீர் சேகரிப்பு அமைப்பில் அடைப்பு ஏற்படாமலிருக்க புதிய யுக்தியை பயன்படுத்தியமைக்காக 11வது மண்டல அலுவலர் திரு. விஜயகுமார் அவர்களுக்கு, “சிறந்த புதுமையாளர் விருது-2014(Best Innovation Award)”னை வழங்கினார்.

Click Here to veiw article.