| 
                                   சைதாப்பேட்டை,  சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் செல்வி டி. ராமலட்சுமி,  தேசியமாணவர் படை மாணவி அவர்கள் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் வருகின்ற குடியரசு  தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட  7 மாணவிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், மற்ற 6 மாணவிகளும் கல்லூரிகளில் படிப்பவர்கள், இவர் மட்டும் தான் பள்ளி  மாணவி என்பது சிறப்பு வாய்ந்தது.  தற்பொழுது  கோயம்புத்தூர் தேசிய மாணவர் படை முகாமில் இதற்காக சிறப்பு பயிற்சி பெற்று வரும் இவர்  28.12.2017 அன்று மாலை டெல்லிக்கு இரயில் மூலம் பயணம் சென்றுள்ளார்.  
                        
                           
						 
                        
                       |